மரக்காணம், : கோட்டக்குப்பம் அடுத்த குயிலாப்பாளையத்தில் போலீஸ் தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது.காணும் பொங்கல் அன்று கிராமங்களில் மஞ்சு விரட்டு விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்க அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் மாடுகளை வைத்து மஞ்சு விரட்டு நடத்த போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால், குயிலாப்பாளையம் உட்பட பல கிராமங்களில் போலீசாரின் தடையை மீறி வழக்கம் போல் மஞ்சு விரட்டு நடந்தது. இதனால், பரபரப்பு நிலவியது. இதனை போலீசாரும் கண்டும் காணாமலும் இருந்தனர்.