முழு ஊரடங்கால் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கால் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி, வாகனங்கள் இயங்காததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கை அரசு அறிவித்தது.நேற்று 2வது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கையொட்டி, மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தவர்களிடம் சரியான ஆவணங்களை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர்.தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்ததோடு, வழக்குப் பதிந்து அபராதமும் விதித்தனர். முழு ஊரடங்கையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றியும், வாகனங்களின்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X