திண்டிவனம் : காணும் பொங்கலையொட்டி, தீவனுார் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் உள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் நடை திறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.