விபத்துக்கு வித்திடும் மேன்ஹோல்கள்.. வாகன ஓட்டிகள் கவனம் சிதறினால் அவ்வளவுதான்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
05:35

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மேன்ஹோல்கள் மேடு, பள்ளங்களாக இருப்பதோடு, சேதமடைந்தும் காணப்படுவதால் ,வாகன ஓட்டிகள் கவனம் சிதறினால் விபத்துக்களை சந்திக்கும் அபாயம் அதிகரிக்கிறது.



விருதுநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்ட பணிகள் இன்று வரை முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதும், சாக்கடைகளில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலப்பதும் வாடிக்கையாகி உள்ளது. தொற்று வியாதிகளும், கொசுத்தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இவற்றின் மேன்ஹோல்கள் பல சேதமடைந்தும், மேடு, பள்ளமாக காணப்படுகின்றன. இதனால் நகர்ப்பகுதிகளில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

ராமமூர்த்தி ரோடு, அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் ரோடு, ஏ.டி.பி.,காம்பவுண்ட் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றிய பகுதிகளில் மேன்ஹோல்கள் சேதமடைந்துள்ளன. வாடியான் தெரு, கீழக்கடை தெரு, மதுரை ரோடு, நேருஜி நகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மேன்ஹோல்கள் உயர்ந்தும் சில இடங்களில் ரோட்டில் இருந்து தாழ்ந்தும் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பல இடங்களில் உள்ள மேன்ஹோல்களில் தரமற்ற மூடிகள் போட்டுள்ளதால் லாரி ஏறி இறங்க சேதமடைகின்றன.குறுகிய தெருக்கள் உள்ள பகுதிகளிலும் மேன்ஹோல்கள் ஒரு அபாய குழி போல் தான் உள்ளதால், குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்கவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேன்ஹோல்கள் குறித்து மக்கள் புகார் அளித்தாலும் நகராட்சி நிர்வாகம் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை.

ஊரக பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மேன்ஹோல்களை தோண்டுகிறோம் எனும் பெயரில், ரோட்டை சேதப்படுத்துவதையும் நகராட்சி நிர்வாகம் அசட்டையாக செய்து வருகிறது. பாதாளசாக்கடை திட்டம் இன்று வரை பிரச்னை தரும் ஒன்றாக தான் உள்ளது. முழுமையடையாத இத்திட்டத்தில் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மேன்ஹோல்களை சமன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலை குறித்து ஆய்வு செய்யுங்க

மேன்ஹோல்கள் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் ஒன்றாக தான் நகர்ப்பகுதிகளில் உள்ளன. நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து மேன்ஹோலின் தரத்தின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திடீரென மேன்ஹோல்கள் உடைந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.ஆறுமுகம், ஆட்டோ டிரைவர்.

விபத்தை சந்திக்கும் வாகன ஒட்டிகள்

மேன்ஹோல் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் தாழ்வாகவும் இருப்பதால் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். சமன்படுத்தப்படாமல் உள்ளதால் வாகனங்கள் ஏறி இறங்க மேன்ஹோல் மூடிகள் விரைவில் சேதமடைகின்றன. மைக்கேல்ராஜ், தனியார் ஊழியர்.

கண்டுக்காததால் அலட்சியம்

சிறியதாக இருக்கும் போதே மக்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் நாளடைவில் பெரிய சேதம் ஏற்பட்டு ரோட்டின் நடுவே குழி போன்ற அமைப்பு ஏற்படுகிறது. விபத்தை தடுக்க மேன்ஹோல் அருகே கற்களும், கம்பும் நட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவதை தான் நகராட்சி செய்கிறது.ஜெயபாரத், தனியார் ஊழியர்.நடவடிக்கை எடுக்கப்படும்மேன்ஹோல்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர், விருதுநகர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X