விழுப்புரம் : பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தனது குடும்பத்தோடு பொங்கலிட்டு வழிபட்டார்.பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மோகன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளோடு பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.