விழுப்புரம் |: வானுார் அருகே தனியார் கல்லுாரியில் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த ஆகாசம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நிர்வாக அதிகாரி கணேசன், 30; நேற்று காலை கல்லுாரிக்குச் சென்று பார்த்தபோது, கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., உட்பட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.