வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் எதிர்பாராத வகையில் ஐந்து சென்டிமீட்டர் மழை பெய்ததால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஜன. 14 ம் தேதி நிலவரப்படி 47 அடி பிளவக்கல் பெரியாறு அணையில் 27.56 அடி தண்ணீர் இருந்த நிலையில் மழையால் 30.6 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் 42 அடி கோவிலாறு அணை நீர் 22.25 அடியாக உயர்ந்தது.எதிர்பாராத மழையால் 2 அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.