வீட்டு தனிமையில் உள்ளோருக்கு உதவ மாநகராட்சி சார்பில் களப்பணியாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
05:50

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளோருக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை செய்து கொடுக்க, சென்னை மாநகராட்சி சார்பில், 1,535 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சில நாட்களாக கொரோனா தொற்றின் பரவலும், மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள, ௧,௦௦௦ கொரோனா களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், 200 வார்டு களுக்கும் தலா ஐந்து பணியாளர்கள் வீதம் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த பணியாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்டோர்

பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என, தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.சென்னை மாநகரில் தற்பொழுது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.இந்த ஏழு மண்டலங்களில் வீட்டு தனிமையில் உள்ளோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக, வார்டுக்கு ஐந்து களப்பணியாளர்கள் வீதம், 535 களப்பணியாளர்கள் என, மொத்தம் 1,535 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X