நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.,வின் திட்டம் பலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 20 பேரில் 12 பேர் அ.தி.மு.க., வசம் இருந்ததால் ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக இருந்த பா.ம.க., சுயேட்சை, ஒரு அ.தி.மு.க., கவுன்சிலர்களை தி.மு.க., தன் வசம் இழுத்ததால் தி.மு.க.,வின் எண்ணிக்கை 7 லிருந்து 10 ஆனது.தற்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க.,வினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதனால் அ.தி.மு.க., வசம் உள்ள தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கைப்பற்ற தி.மு.க., கடிதம் கொடுத்தது. அதற்கான கூட்டம் வரும் ஜன.21ல் நடக்க உள்ளது.இதற்கிடையே அ.தி.மு.க.,வினர் தங்களிடம் கட்சி பொறுப்பு, கட்சிப் பற்றுடைய 8 பேர் கவுன்சிலர்களாக இருக்கின்றனர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடையும் என முழு நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.