அலைபேசியில் பேசியப்படி செல்லும் வாகன ஓட்டிகள்.. விதிமீறல்! கண்டும் காணாமல் விடுவதால் தொடரும் விபத்துக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
05:54

நரிக்குடி : விருதுநகர் மாவட்டத்தில் வாகனங்களை ஓட்டும் பலர் அலைபேசியில் பேசியப்படியே ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இதனை கண்காணித்து அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.



வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அங்கம் ஆகிப்போனது அலைபேசி.ஒரே வீட்டிற்குள் இருப்பவர்கள் கூட முகத்துக்கு முகம் பேசாமல் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசக்கூடிய அவல நிலை உள்ளது. அவசர உலகத்தில் தொழில்நுட்பம் அவசியமானது. அதற்கான கால கட்டங்களில் தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் பயனுள்ளதாகவும் இருக்கும்.

குறிப்பாக அலைப்பேசி ஒரு வரப்பிரசாதம். வாகனங்கள், சைக்கிள், டூவீலர்களில் செல்லும்போது அலைபேசியில் பேசி கொண்டே சிலர் ஓட்டுகின்றனர். கவன குறைவால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. விதிமீறல்களால் எதிரில் வரக்கூடியவர்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும் கூட பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க வேண்டிய போலீசார் பெரும்பாலான இடங்களில் இருப்பது இல்லை.

இதனால் இதை சாதகமாக்கி கொண்டு வாகனங்களில் செல்லும்போது அலைபேசியில் பேசியப்படி வாகனங்களை ஓட்டுகின்றனர். இது போன்றவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதோடு இதனை கண்காணிக்க கூடுதல் டிராபிக் போலீசாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...............

மற்றவர்களுக்கு பாதிப்பு

வாகனங்களை ஓட்டும் போது தான் பல்வேறு பிரச்னைகள் குறித்து அலைபேசியில் பேசுகின்றனர். தனித்தனியாக டூவீலர்களில் செல்லும் இளைஞர்கள் தோல் மீது கையை போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டி விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று தவறான செயல்களால் மற்றவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும். அதற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.
- காளீஸ்வரன், தனியார் ஊழியர், நரிக்குடி. ............

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X