மதுரை : மதுரையில் காந்தி மியூசியம், அமைதி சங்கம், செசி மையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
செசி நிர்வாகி ஜில்கார் ஹரிஸ் தலைமை வகித்தார். சூரியகுமார் வரவேற்றார். அமைதி சங்க தலைவர் சரவணன் பேசினார். கடவூர், சிகுபட்டி பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். செசி நிர்வாகிகள் வினோத், பொண்ணுக்காளை, சின்னக்காள், வெள்ளையம்மாள், அழகி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* மதுரை யு.சி., மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜகுமார் தலைமையில் நடந்த விழாவை ஆசிரியர் ராஜகிருபாகரன் துவக்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாலிக்பாபு முன்னிலை வகித்தார். ஆசிரியர் அருள்ஜெயசீலன் பொங்கல் சிறப்புகளை விளக்கினார். பொங்கல் வைக்கப்பட்டது.
* காந்தி மியூசியத்தில் சமத்துவ பொங்கல் விழா மியூசியசெயலாளர் நந்தா ராவ் தலைமையில் நடந்தது.தேசிய கொடியேற்றப்பட்டு சர்வசமய வழிபாடு நடந்தது. அனைவருக்கும் பொங்கல், கரும்பு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்வி அலுவலர்நடராஜன், பணியாளர்கள் சுமித்ரா, நித்யா பாய், நாகசுந்தரம், தனபாண்டி செய்தனர்.
சோழவந்தான்: திருவேடகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் இளைஞர் மன்ற தலைவர் முத்துமகேஸ்வரன் தலைமையில் விழா நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி, செயலாளர் சேகர், துணைத்தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். ஏற்பாடுகளை கிளை செயலாளர்கள் கணேசன், சரவணன் செய்தனர்.