மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய சிந்தனை பேராசிரியர் டாக்டர் கனகசபாபதி நினைவாக மாணவர்கள் ரூ.5,00,001 மதிப்பில் அறக்கட்டளை துவக்கினர்.இந்த அறக்கட்டளையில் கனகசபாபதியின் கல்வி, சமூக பணிகளை மாணவர்களிடம் எடுத்துரைக்கும் நிகழ்வுகள் நடக்கவுள்ளன. கனகசபாபதி மாணவர்களான புதுச்சேரி அரசு செயலர் சுந்தரேசன், மதுரை காமராஜ் பல்கலை காந்திய சிந்தனை, ராமலிங்கர் தத்துவ துறை முன்னாள் தலைவர் ஆண்டியப்பன், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், கணக்காளர் சுமித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.