புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் முழுதும் 7,602 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதிதாக 1160 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,37,710 ஆக உயர்ந்தது, தொற்று சதவீதம் 43.66 ஆக உயர்ந்துள்ளது
.கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் 133 பேர், வீட்டு தனிமையில் 7,469 பேர் என மொத்தம் 7,602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று பாதிப்பால், புதுச்சேரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 31 வயது வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இறப்பு எண்ணிக்கை 1887 ஆக உயர்ந்ததுநேற்று முன்தினம் 142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,021 ஆக அதிகரித்தது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 494 பேருக்கும், இரண்டாவது டோஸ் 414 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 263 பேருக்கும் செலுத்தப் பட்டது.இதுவரை 9,06405 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மொத்தம் 14,97,073 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.