காரைக்கால் : காரைக்கால் எல்லை பகுதியில் எஸ்.பி., ரகுநாயகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்து, தடுப்பூசி போட்ட நபர்களை மட்டும் அனுமதித்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், வெளியூர்களில் இருந்து வருவோரில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.அதன்பேரில், வாஞ்சூர், அம்பகரத்துார், நல்லாத்துார், அன்னவாசல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் எஸ்.பி., ரகுநாயகம் தலைமையிலான போலீசார், சுகாதார பணியாளர்களுடன் இணைந்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம், தடுப்பூசி சான்றிதழ்களை ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திய நபர்களை மட்டும் காரைக்காலுக்கு செல்ல அனுமதித்தனர்.