புதுச்சேரி : புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரியில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
தலைமை செயலர் உட்பட பல துறைகளின் செயலர், இயக்குநர்கள் தொற்று பாதித்து, சிகிச்சையில் உள்ளனர்.சுகாதாரத் துறையில் 30 டாக்டர்கள், 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள போலீசார் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.உருளையன்பேட்டை போலீசில் 7 பேரும், பெரியக்கடை -3 உட்பட கிழக்கு பகுதியில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வில்லியனுார் -2, மங்கலம் -1 உட்பட 5 பேர், மேட்டுப்பாளையம் -2, லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் -2 பேர் பாதிக்கப்பட்டனர்.காரைக்காலில் 7, மாகியில் 6, ஏனாமில் 2 பேர் என, மாநிலம் முழுதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.