மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் 550 பேருக்கு கொரேனா பாதித்து, 3466 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று பாதிப்பு 569 ஆகவும் சிகிச்சை பெறுவோர் 3696 ஆகவும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் 321 பேருக்கு தொற்று குணமானது. நேற்று 569 பேருக்கு கொரோனா பாதித்தது, 338 பேர் குணமாகினர். ஒருவர் இறந்தார்.நேற்று 2200 ஆக்ஸிஜன்படுக்கைகளில் 271, 994 ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகளில் 132, 665 ஐ.சி.யூ., படுக்கைகளில் 40, 1184 கோவிட் கேர் சென்டர்களில் 85 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
மதுரையில் தினமும் கொரோனா ஆட்டம் காட்டி வருவதால் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்த கூறும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சமூக இடைவெளி, கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையாக பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் காற்றில் பறப்பதால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது என பொதுமக்களும் புரிந்து நடக்க வேண்டும்.