காணும் பொங்கலில் மாமல்லை 'வெறிச்' | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
காணும் பொங்கலில் மாமல்லை 'வெறிச்'
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், காணும் பொங்கலன்று லட்சம் பேர் குவிந்து களைகட்டும் சுற்றுலா, நேற்று ஊரடங்கால் வெறிச்சோடியது.மாமல்லபுரத்தில் ஆண்டு முழுதுமே, சிற்பங்கள் காண, பயணியர் சுற்றுலா வருகின்றனர். சென்னை மற்றும் சுற்றுபுற பகுதியினர், வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில் இங்கு குவிகின்றனர்



.ஆண்டில் அதிகபட்சமாக, காணும் பொங்கலன்று, குடும்பமாக, நண்பர்கள் குழுவாக, தனி நபராக என, ஒரு லட்சம் பேருக்கும் திரள்வர்.அரசு பஸ்கள், புறவழிப்பாதை, சுற்றுலா வாகனங்கள் வேரிடம் என நிறுத்தப்படும். பயணியர் நடந்து, ஷேர் ஆட்டோவில், சிற்பங்கள் காண செல்வர். சிற்பங்கள், கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதும். கடைகளில் வியாபாரமும் களைகட்டும்.காணும் பொங்கலான நேற்று, தொற்று தடுப்பு ஊரடங்கால் வெறிச்சோடியது. 20 ஆண்டுகளில், இந்நாளில் முதல்முறையாக சுற்றுலா முற்றிலும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X