மதுரை : 'அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் தபால் ஓட்டு அளிக்க தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
சங்க பொதுக் குழுக் கூட்டம் செயல் தலைவர் ஒச்சாத்தேவர் தலைமையில் நடந்தது. தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி தொலைதுார பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு தபால் ஓட்டு உரிமை வழங்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். 14வது ஊதியக் குழு ஒப்பந்தத்தை விரைவில் துவங்கி அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு: 2022ம் ஆண்டிற்கு தலைவராக ரவி, பொதுச் செயலாளராக ஷாஜஹான், பொருளாளராக பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கண்ணன், வீரப்பெருமாள், செயலாளர்களாக செல்லத்துரை, ஒச்சாத்தேவர், ஆலோசகர்களாக குணசீலன், அங்குசாமி, சவுந்தர்ராஜ், சேதுராமன் தேர்வாயினர்.