டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டியில் நண்பர்கள் வட்டாரம் சார்பில் பொங்கலை முன்னிட்டு தெருவோர ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பொது செயலாளர் விஜயபார்த்திபன், நிர்வாகிகள் சுந்தர், காந்தி, நன்கொடையாளர்கள் ஓய்வு பெற்ற டி.இ.ஓ., ரேணுகா, வழக்கறிஞர் ராஜேந்திரன், கல்வித்துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சின்ன குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.