மறைமலை நகர் : தெருக்களில் பன்றித் தொல்லை அதிகரித்து இருப்பதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர், பேரமனூர், தாலிமங்களம், ஆப்பூர், தெள்ளிமேடு, கொளத்தூர், வெங்கடாபுரம், வெண்பாக்கம் போன்ற கிராமங்களில், பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த தெருக்களில் உள்ள குப்பை கிளறுவதால், குப்பை தெரு முழுதும் காற்றில் பறந்து துர்நாற்றம் உண்டாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர் மற்றும் வேர்க்கடலை பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த கிராமங்களைச் சுற்றி காப்புக் காடுகள் உள்ளன. இதன் உள் சென்று மறைந்து விடுகிறது.இதனால் விவசாயிகள் செய்வதறியாது கவலையில் உள்ளனர்.எனவே அதிகாரிகள்பன்றி வளர்ப்பவர்களுக்கு அறிவுரைவழங்கி அவற்றை முறையாக பண்ணை முறையில் வளர்க்க உத்தரவிட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.