அரசு பஸ் வசதியின்றி கிராமத்தினர் அவதி | மதுரை செய்திகள் | Dinamalar
அரசு பஸ் வசதியின்றி கிராமத்தினர் அவதி
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

பேரையூர் : பேரையூர் தாலுகா சாலிச்சந்தை, அம்மாபட்டி, ஆண்டிபட்டி, சொக்கம்பட்டி கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் மக்கள் அவதியில் உள்ளனர்.

திருமங்கலத்திலிருந்து அம்மாபட்டிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. சில நாட்களில் அந்த பஸ் நிறுத்தப்பட்டது.தற்போது வரை இந்த நான்கு கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ரோடு வசதி இருந்தும் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் 4 கி.மீ., துாரமுள்ள பேரையூருக்கு நடந்து செல்கின்றனர்.தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி மட்டும் அளிக்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை என கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X