மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பயணியர், ஷேர் ஆட்டோ பயணத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.கொரோனா தொற்று தடுப்பு காரணமாக, நம் நாட்டில் வெளிநாட்டு பயணியர் சுற்றுலா, இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சுற்றுபுற பகுதிகளில் இயங்கும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள், தனி நபராக, குழுவாக, அவ்வப்போது மாமல்லபுரம் சுற்றுலா வருகின்றனர்.தற்போது மாமல்லபுரத்தில் குவிந்த, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்கள், சிற்ப பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.இதை கண்ட சில வெளிநாட்டுப் பயணியரும், சிற்ப பகுதியிலிருந்து விடுதிக்கு, ஷேர் ஆட்டோவில் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.