செங்கல்பட்டு : மாமண்டூர் பாலாற்று மேம்பால சாலையில், பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும், ஆயிரக்கணக்கான போக்குவரத்து இயக்கப்படுவதால், இச்சாலை எப்போதும் முக்கிய பிரதான சாலையாக இருக்கின்றது.
செங்கல்பட்டு அடுத்த, மாமண்டூர் பாலாற்று மேம்பாலம், திருச்சியில் இருந்து, சென்னை வரும் பாலத்தில், அங்கங்கே பள்ளம் ஏற்பட்டு, கட்டுமான கம்பிகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.இது, இந்த சாலையில் பயணிக்கும், இருசக்கர வாகன ஓட்டுனர்களின் டயர்களில் கம்பிகள் பட்டு, எந்தநேரமும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.இதேபோன்று உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர், சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.