முழு ஊரடங்கின் போது ஊர் சுற்றிய 600 பேருக்கு அபராதம் விதிப்பு | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கின் போது ஊர் சுற்றிய 600 பேருக்கு அபராதம் விதிப்பு
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று, முழு ஊரடங்கின் போது முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், விதிமீறி சென்றவர்கள் என மொத்தம், 600 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர்களை பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் விசாரித்து, அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.அதே போல், முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது.முழு ஊரடங்கையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், நேற்று காலை, மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.அப்போது, வாகன ஓட்டிளை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து அனுப்பினார். தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நேற்று காலை, காந்தி சாலை, ரங்கசாமி குளம் பகுதிகளில் உள்ள இரு ஓட்டல்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட்டது தெரிய வந்தது. போலீசார் எச்சரித்து, 500 ரூபாய் வீதம் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.இது குறித்து, எஸ்.பி., சுதாகர் கூறுகையில், 'ஊரடங்கின் போது பொது மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை கண்காணிக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், முக கவசம், சமுக இடைவெளி, மற்றும் விதிமீறி சென்றவர்கள் என, மொத்தம், 600 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X