கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமியால், சாலை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த வெளிவட்ட சாலையானது சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், தாம்பரம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி, செங்குன்றம், மீஞ்சூர் பகுதிகளை இணைக்கிறது.பொன்னேரி - -திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் தொடங்கி, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முடிகிறது. மேலும், சென்னை - திருப்பதி , சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த சாலையில் இதுவரை வாகனங்கள் சுங்கக் கட்டணம் இன்றி பயணித்தன. தற்போது சின்னமுல்லைவாயல், நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, முடிச்சூர் ஆகிய இடங்களில், நான்கு சுங்க கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஐந்து பாதைகள் உள்ளன. ஒன்று வி.ஐ.பி., மற்றும் அவசர வாகனங்கள் செல்லவும், மூன்று பாதைகளில் பாஸ்டேக் வசதியும், ஒன்றில் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 10ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாஸ்டேக் மூலம் பணம் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல் இருந்ததால், கட்டணம் வசூலிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல், சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.கோளாறுகள் சரி செய்யப்பட்டு, இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து வண்டலுார் செல்ல குறைந்தபட்சம் இலகு ரக வாகனங்களுக்கு 109 ரூபாயும், அதிகபட்சமாக பெரிய டிரக் வாகனங்களுக்கு 702 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பாஸ்டேக் இல்லையெனில் இருமடங்கு கட்டணம்டோல்கேட்களில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான அத்யாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. ஓவர் லோடுடன் செல்லும் வாகனங்களை கண்காணிக்க நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கபட உள்ளது. பணம் கொடுத்து பயணிக்கும்போது பல்வேறு சிரமங்கள் ஏற்படும். அதை தவிர்க்க அனைவரும் பாஸ்டேக் மூலம் பயணிக்க அறிவுறுத்தி வருகிறோம். இதனால் இருமடங்கு பணம் செலுத்துவது தவிர்க்கப்படும். திட்டமிட்ட தேதியில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில் பாஸ்டேக் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தன.
தற்போது நெட்வொர்க் கனெக்டிவிட்டி சரிசெய்யப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்து உள்ளன. இன்றுமுதல் கட்டணம் வசூலிக்க உள்ளோம்.டோல்கேட் தொழில்நுட்ப அதிகாரிசென்னைமீஞ்சூர் - -வண்டலுார் நேரடி கட்டணம்வாகனம்- கட்டணம்கார், ஜீப்,வேன் உள்ளிட்ட இலகுரக வாகனம் -ரூ.109இலகுரகு வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.175சரக்கு வாகனம், பஸ் - ரூ.368பெரிய டிரக் ரூ.401கனரக கட்டுமான வாகனம் - ரூ.576மிகப்பெரிய டிரக் - ரூ.702
- நமது நிருபர் -