மாலையில் களைகட்டிய சுற்றுலா தலங்கள் | செய்திகள் | Dinamalar
மாலையில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், புதுச்சேரியில் பொழுதுபோக்கு இடங்கள் காலையில் வெறிச்சோடி காணப்பட்டன.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது.

வழக்கமாக, காணும் பொங்கலன்று புதுச்சேரியில் கடற்கரை சாலை உள்ளி்ட்ட பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனகசெட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தமிழக போலீசார் தடுப்பு அமைத்து, வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதனால், பயணிகள் வருகை குறைந்தது.அதன் காரணமாக, புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காலையில் வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி காணப்பட்டன.மாலை 3.௦௦ மணிக்குப் பிறகு, கடற்கரை சாலை உள்பட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் படிப்படியாக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

பெரும்பாலும் உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் குவிந்து பொழுதை கழித்தனர்.பொழுது போக்கு இடங்களில் முககவசம் அணியாதவர்களை கண்டறிந்து போலீசார், நகராட்சி, வருவாய் துறை ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.களை கட்டிய சிறுவர் ரயில்பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தாவரவியல் பூங்காவில், சிறுவர் ரயில் களை கட்டியது.காணும் பொங்கலான நேற்று பெற்றோர்களுடன் வந்த குட்டீஸ்கள் சிறுவர் ரயிலில் ஏறி, உலா வந்து மகிழ்ந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X