செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு கலை கல்லுாரியில், நேற்று, முழு நேர ஊரடங்காக இருந்தபோதிலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால், அரசு சுகாதார துறை மூலம் மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.செங்கல்பட்டில் நேற்று ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை கல்லுாரியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் 52 பேர் ஊரடங்கு என்ற போதிலும் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.