சென்னை ; நடிகர் விஜயின் 'பீஸ்ட்' படத்தில் நடிக்கும் நடிகை பூஜா ெஹக்டே, பீமா ஜுவல்லர்ஸ், பெங்களூரு பிராண்டின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டு உள்ளர்.பீமா ஜுவல்லர்ஸ், 97 ஆண்டுக்கு மேலான, புகழ் பெற்று வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்லும் தங்க நகை விற்பனை நிறுவனம்.பல்வேறு, நகரங்களில் விற்பனை செய்து வருகிறது.
புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பெங்களூரு பிராண்டின், முதல் விளம்பர துாதராக, நடிகை பூஜா ெஹக்டே நியமிக்கப்பட்டு உள்ளார்.இவர், நடிகர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாசுடன் ராதே ஷ்யாம் படங்களில் நடித்து வருகிறார்.திரைப்படங்களில் காட்டிய தனித்திறமை நடிப்பால், ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். பேஷன், அசத்தலான ஸ்டைலில் இளைய தலைமுறையிடம் பிரபலமாக விளங்குகிறார்.இது குறித்து, நடிகை பூஜா ெஹக்டே கூறுகையில், 'பீமா ஜுவல்லர்ஸ்- பெங்களூரு புகழ் பெற்ற பாரம்பரிய பிராண்டுடன், இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இது ஒரு பொன்னான, பார்ட்னர்ஷிப்பாக இருக்கும் என கருதுகிறேன்,'' என்றார். பீமா ஜுவல்லர்ஸ்- பெங்களூரு பிராண்ட் நிர்வாக இயக்குனர் விஷ்ணுஷரன் பட் கூறுகையில், 'நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிராண்டாக, பீமா ஜுவல்லர்ஸ் விளங்குகிறது.எங்கள் பாரம்பரிய பண்புகளுடன், இன்றைய காலத்தின் விருப்பங்களை பூர்த்தி செய்து, வெற்றி பயணத்தில் சிறந்த முறையில் முன்னேறி செல்கிறோம்,'' என்றார்.