மாமல்லபுரம் : பட்டிபுலத்தில் காரில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.மாமல்லபுரம் அடுத்த, பட்டிபுலத்தைச் சேர்ந்தவர்கள், முனுசாமி மகன் சந்திரசேகர், 29 மற்றும் சேகர் மகன் வேணுகோபால், 20. நேற்று முன்தினம், இரவு 11:30 மணிக்கு, இவர்கள், இருசக்கர வாகனத்தில், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் சென்றுஉள்ளனர்.மாமல்லபுரத்திலிருந்து, சென்னை சென்ற காரில், இருசக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் இறந்தார்.வேணுகோபால் காயமடைந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.