திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை, நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னலாடை துறையினர் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடை உற்பத்தி மூலப்பொருளான ஒசைரி நூல் விலை கடந்த 15 மாதங்களில் கிலோவுக்கு 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு, வெளிமாநிலத்தவர்களிடம் ஆர்டர்கள் எதுவும் திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு பெறவில்லை. கைநழுவி போட்டி நாடுகளுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கள் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நெட்டிங், டையிங், பிரிண்டிங் என சார்பு நிறுவனங்கள் என 15 ஆயிரம் நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.