சேலம்: மூன்றாம் அலையில் உச்சமாக, சேலம் மாவட்டத்தில், 529 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று, 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 293 பேர், ஓமலூர், 31, ஆத்தூர், 26, பனமரத்துப்பட்டி, 25, சேலம் ஒன்றியம், 16, சங்ககிரி, 14, வீரபாண்டி, 12, கெங்கவல்லி, ஆத்தூர் நகராட்சி தலா, 10, காடையாம்பட்டி, 9, இடைப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, மேட்டூர் நகராட்சி தலா, 8, மகுடஞ்சாவடி, மேச்சேரி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் தலா, 7, கொளத்தூர், 6, நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் தலா, 5, நரசிங்கபுரம் நகராட்சி, 4, கொங்கணாபுரம், 2 பேர் என, சேலம் மாவட்டத்தினர், 528 பேர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இது கடந்த, 10ல், 133 பேராக இருந்தது. 11ல், 256 பேர், 12ல், 285 பேர், 13ல், 426 பேர், 14ல், 499 பேர் என படிப்படியாக அதிகரித்து, நேற்று முன்தினம், 427 ஆக குறைந்த நிலையில், நேற்று, 529 பேராக எகிறியுள்ளது.