ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை 3,000ல் இருந்து 4,500 ஆக அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
13:41

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை, உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிப்ரவரி இரண்டாம் வாரம், கொரோனா உச்சத்தை தொடும் என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த டிச., 1 முதல், ஜன., 14 வரை, வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய, 540 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களில், 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். அத்துடன், கொரோனா சமூக பரவலாகி வருவதால், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை, 3,000ல் இருந்து படிப்படியாக அதிகரித்து, தற்போது, 4,500 ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: முதல் கட்டமாக, சேலம் தொங்கும் பூங்காவில், கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதேபோல் மேலும், 32 மையம், மாவட்டம் முழுதும் விரைவில், தொடங்கப்படும். அங்கு, கொரோனா அறிகுறி, லேசான பாதிப்புக்கு ஆளாவோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நோய் வீரியம் அதிகம் காணப்படுவோர், அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைதிக்கு உறுதி: சேலம், அழகாபுரம்,மோளப்பட்டியான் வட்டத்தை சேர்ந்த, 23 வயது ஆட்டோ டிரைவர், நேற்று முன்தினம், அம்மாபேட்டை மகளிர் போலீசாரால், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா உறுதியாக, சேலம் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 போலீசார்: இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவருக்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. இதனால், அவர் சங்ககிரியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். மற்ற போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இடைப்பாடி, பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் தலா ஒரு போலீசாருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

விரைவில் சித்த மருத்துவ மையம்: சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் கூறியதாவது: சேலத்தில், 220 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம், விரைவில் தொடங்க உள்ளோம். கலெக்டர் அனுமதிக்கு காத்திருக்கிறோம். தவிர, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில், சித்த மருத்துவ நல மையம் தொடங்கப்படும். அங்கு, தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவர்களுக்கும், நோயை தடுக்கவும், 5 நாளுக்கு சித்த மருந்து அடங்கிய சிறப்பு, 'கிட்' வழங்கி, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவர். மேலும், கலெக்டர் அலுவலகம், மத்திய சிறை, நீதிமன்ற வளாகம், மாநகராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்படும். மாநகராட்சியுடன் இணைந்து, அதற?கான பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X