கைதிக்கு உறுதி: சேலம், அழகாபுரம்,மோளப்பட்டியான் வட்டத்தை சேர்ந்த, 23 வயது ஆட்டோ டிரைவர், நேற்று முன்தினம், அம்மாபேட்டை மகளிர் போலீசாரால், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா உறுதியாக, சேலம் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 போலீசார்: இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவருக்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதியானது. இதனால், அவர் சங்ககிரியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். மற்ற போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இடைப்பாடி, பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் தலா ஒரு போலீசாருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.
விரைவில் சித்த மருத்துவ மையம்: சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் கூறியதாவது: சேலத்தில், 220 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம், விரைவில் தொடங்க உள்ளோம். கலெக்டர் அனுமதிக்கு காத்திருக்கிறோம். தவிர, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில், சித்த மருத்துவ நல மையம் தொடங்கப்படும். அங்கு, தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவர்களுக்கும், நோயை தடுக்கவும், 5 நாளுக்கு சித்த மருந்து அடங்கிய சிறப்பு, 'கிட்' வழங்கி, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவர். மேலும், கலெக்டர் அலுவலகம், மத்திய சிறை, நீதிமன்ற வளாகம், மாநகராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்படும். மாநகராட்சியுடன் இணைந்து, அதற?கான பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.