தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 'கார் ஆம்புலன்ஸ்' திட்டம் செயல்படுத்தப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
13:42

சேலம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, வட்டார அளவில், 'கார் ஆம்புலன்ஸ்' திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை வேகம் எடுத்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களுக்கு, சளி தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் முடிவு, ஓரிரு நாளுக்கு பின் தெரியவந்து, தொற்று உறுதியானால், வீட்டு தனிமை, தனிமை மையம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், முடிவு தெரியும் முன், தொற்றால் பாதிக்கப்பட்டவர், ஓட்டல், டீக்கடை, மருந்தகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். அதன்மூலம் தொற்று பரவலை தடுப்பதில் சிக்கல் உள்ளது. அறிகுறியுடன் பரிசோதனைக்கு வரும்போது, பரிசோதனை முடிந்த பின், வீடு, தனிமை மையம், மருத்துவமனைக்கு செல்ல, ஆம்புலன்ஸ் பயன்படுத்த வேண்டும். அதற்கு, 'கார் ஆம்புலன்ஸ்' திட்டத்தை செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது: தொற்று அறிகுறி உள்ளவர், சளி தடவல், ஸ்கேன் பரிசோதனைக்கும், மருத்துவமனைக்கும், பஸ்சில் செல்வதால் தொற்று பரவல் ஏற்படும். பைக்கில், அவருடன் செல்வோருக்கும் தொற்று ஏற்படும். கடந்த ஆண்டு பாதிப்பு அதிகம் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது, சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கார் ஆம்புலன்ஸ் திட்டம் உதவியது. அதேபோல், வட்டார அளவில், இத்திட்டத்தை அமல்படுத்தினால், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக, மருத்துவமனையில் சேர்க்க உதவியாக இருக்கும். மாநகர், நகராட்சி பகுதிகளில் கூட, அரசு, தனியார் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஆனால், ஒன்றியம், பேரூராட்சி, கிராம அளவில், ஆம்புலன்ஸ் வசதி இல்லை. அதனால் வட்டார அளவில் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X