சங்ககிரி: ஓங்காளியம்மன் கோவில், பொங்கல், தீ மிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையில் உள்ள, ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோவில்களில், பூச்சொறிதல், கொடியேற்றத்துடன், பொங்கல், தீ மிதி விழா விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், அரசின் வழிகாட்டுதல்படி பூசாரி மட்டும் பூஜை செய்தார். தொடர்ந்து, அம்மன் சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்க உள்ளது. வரும், 23 இரவு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மன் உற்சவ சுவாமிகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவர். 24ல், பவானி கூடுதுறையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, அன்றிரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கும். 25 காலையில், வி.என்.பாளையம், தீயணைப்பு அலுவலக பின்புறம் உள்ள ஊர் கிணற்றில் இருந்து, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வந்து, தீ மிதிக்க உள்ளனர். 29ல் மஞ்சள் நீராட்டம், அம்மன் ஊர்வலத்துடன், விழா நிறைவடையும்.