ஞாயிறு முழு ஊரடங்கு: 2ம் வாரம் சாலைகள் 'வெறிச்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
13:43

சேலம்: கொரோனா கட்டுப்பாடால் ஞாயிறான நேற்று முழு ஊரடங்கு அமலால், இரண்டாம் வாரமாக, சாலைகள் வெறிச்சோடின.

கொரோனாவால், கடந்த ஜன., 6 முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறில் முழு ஊரடங்கு அமலானது. இதையடுத்து, இரண்டாம் வார ஞாயிறான நேற்று, சேலம், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டு கள், ஜங்ஷன், ஐந்து, நான்கு ரோடுகள், சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம் பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்பட நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. போலீசார், முக்கிய வீதி, சந்திப்பு, சிக்னல்களில் நின்று, வெளியே வந்த வாகன ஓட்டிகளை சோதனை செய்து, உரிய அறிவுரை வழங்கி அனுப்பினர். ஓட்டல்களில், 'பார்சல்' மட்டும் வழங்கப்பட்டதால், அவற்றை வாங்க செல்வதாக கூறி பலர் தேவையில்லாமல் இருசக்கர வாகனங் களில் வலம் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பல இடங்களில், தேவையின்றி வந்தவர் களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். சேலத்தை சுற்றி செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும், வாகன போக்குவரத்தின்றி காணப்படட்டன. கடைகள் அடைக்கப்பட்டு, மருந்து, பெட்ரோல் பங்க் மட்டும் செயல்பட்டதால், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், சில சரக்கு வாகனம், மருத்துவ வாகனங்கள் மட்டும் சென்றன. அதேபோல் நான்கு வழிச்சாலைகளில் பெரும்பாலான ஓட்டல் மூடப்பட்டிருந்ததால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்சென்ற சரக்கு வாகன டிரைவர்கள், டீ, சாப்பாட்டை தேடி சிரமத்துக்குள்ளாகினர். ஓமலூர், அண்ணா சிலை முன், போக்குவரத்து போலீசார் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை கண்காணித்தனர். காடையாம்பட்டி வட்டாரத்தில், தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாரமங்கலம் நகராட்சி முழுதும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

களையிழந்த சுற்றுலா தலம்: ஏற்காடு, மேட்டூர், முட்டல், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடின. இதனால், சுற்றுலா தலங்களை நம்பி வியாபாரம் செய்த கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர். பூலாம்பட்டியில், விசைப் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

ஓட்டல் விற்பனை பாதிப்பு: சேலம் மாநகரில், 90 சதவீதத்துக்கு மேலான ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த சில ஓட்டல்களிலும், கூட்டம் இன்றி காணப்பட்டன. அசைவ உணவகங்களில் ஓரளவு விற்பனை நடந்தது. வியாபாரம் பாதிப்பால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

உழவர் சந்தையில் ஆய்வு: சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 உழவர் சந்தைகளும் செயல்பட்டன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி, அம்மாபேட்டை உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படுகிறதா, சரியான விலைக்கு காய்கறி விற்கப்படுகிறதா என, மக்களிடம் கேட்டறிந்தார். அதேபோல் உழவர் சந்தையில் வியாபாரிகள் ஊடுருவல், வெளிப்புற ஆக்கிரமிப்பு நடக்கிறதா என பார்வையிட்டார். அம்மாபேட்டை உழவர் சந்தையில், 2,830 கிலோ காய்கறி, கீரை, பழங்கள் மூலம், ஒரு லட்சத்து, 1,685 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

விதிமீறிய 8 பேர் கைது: ஓமலூரில் முழு ஊரடங்கை மீறி வலம் வந்த, கீழ் காமாண்டப்பட்டியை சேர்ந்த சுசீந்திரன், 22, மாரமங்கலம் சத்தியமூர்த்தி, 21, பச்சனம்பட்டி காவேரி, 48, ஓமலூர் சரவணன், 42, புளியம்பட்டி தங்கவேல், 41, ஆகியோரை, ஓமலூர் போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர். அதேபோல், ஓமலூரில் கறிக்கடை திறந்திருந்த, புளியம்பட்டி வெங்கடேஷ், 33, என்பவரையும் போலீசார் கைது செய்து விடுவித்தனர். குள்ளானூரில் சிக்கன் கடை நடத்திய, தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டி கோபி, 28, மல்லப்பனூரில் சிக்கன் கடை வைத்த, அதே பகுதியை சேர்ந்த செல்வம், 28, ஆகியோரை, நங்கவள்ளி போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X