சேலம்: பொங்கல் பண்டிகை முடிந்து கரிநாளான நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சேலத்தில் சிலர் இறைச்சி வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். ஆனால் பலரும், முன்கூட்டியே, 'ஆர்டர்' கொடுத்திருந்தனர். அதனால், காலையிலேயே இறைச்சியை தயார்படுத்தி, தனித்தனி 'பார்சல்' போட்டு வைத்திருந்தனர். அதை வாங்க வருவோரை, கடைக்கு வரவழைக்காமல், வேறு இடத்துக்கு வரவழைத்து கொடுத்தனர். இதனால், இறைச்சி கிலோ, 100 ரூபாய் வரை உயர்ந்து, 800 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், பிராய்லர் கோழி கிலோ, 20 வரை உயர்ந்து, 200 ரூபாய், நாட்டுக்கோழி, 450 முதல், 500 ரூபாய் வரை விற்பனையானது. விலை உயர்ந்தபோதும், முழு ஊரடங்கிலும் பலரும் இறைச்சி வாங்கி சாப்பிட்டனர்.