இருளில் மூழ்கிய இரட்டை மேம்பாலம்; விளக்குகள் ஒளிர நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
13:53

வீரபாண்டி: இரட்டை மேம்பாலம் இருளில் மூழ்கியதால், விளக்குகளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில் விபத்துகளை தடுக்க, 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரட்டை மேம்பாலம், கடந்த ஆண்டு ஜன., 8ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதில், 100க்கும் மேற்பட்ட நவீன எல்.ஈ.டி., விளக்குகள் பொருத்தியுள்ளனர். அதேபோல், பால அடிப்பகுதியான அரியானூர் சந்திப்பிலும், விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்துக்கும் மேலாக பாலத்திலும், அதன் அடிப்பகுதியிலும் விளக்கு கள் எரியவில்லை. இதனால் மாலை, 6:00 மணிக்கு மேல், அப்பகுதி இருளில் மூழ்கிவிடுகிறது. இதன்மூலம், விபத்துகள் ஏற்படுவதால், அதிகாரிகள் விளக்குகளை எரிய வைக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சத்துடன் செல்லும் அ.தாழையூர் பெண்கள்: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அ.தாழையூர் பிரிவு சாலையில் இருந்து அ.தாழையூர் நூலகம் வரை, 2 கி.மீ.,ல் ஒரு இடத்தில் மட்டும் மின்விளக்கு உள்ளது. பல இடங்களில் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவில் வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் அவலம் தொடர்கிறது. இது குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், போதிய மின்விளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X