ஆம்பூர்: ஆம்பூரில், வன ஊழியர் உள்ளிட்ட, 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட வன ஊழியர்கள், அரசு அலுவலர், பொது மக்கள் என, 100 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வன ஊழியர், அரசு அலுவலர், 20 பேர், பொது மக்கள், 16 பேர் என, 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது நேற்று தெரியவந்தது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் வசித்த பகுதியில், சுதாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.