கரூரில் சட்ட விரோத மது விற்பனை: 7 பேர் கைது: 4 போலீசார் இடமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
16:51

கரூர்: கரூரில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த, இரண்டு நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில், 24 மணி நேரமும் சந்து கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களில், மதுபாட்டில் விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை நாளான நேற்று முன்தினம், வழக்கம் போல், கரூர் மாவட்டத்தில், மது பாட்டில்கள் விற்பனை களை கட்டியிருந்தது. குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், எந்த தடையும் இல்லாமல், மது பாட்டில்கள் விற்பனை நடந்தது. இதுகுறித்து, கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,க்கு புகார் மனுக்களை அனுப்பினர். இதையடுத்து, நேற்று கரூர் மாவட்டம் முழுவதும், போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் நகரப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, வேம்பரசன், பிரசாத், வடிவேல் உள்பட, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 110 மது பாட்டில்களை கரூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காற்றில் பறந்த உத்தரவு: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யக்கூடாது என, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கடந்த, 10ல் அனைத்து கடை விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், டாஸ்மாக் மேலாளர் உத்தரவை மீறி, கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாளில், சந்து கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை ஜோராக இருந்தது.

ஆயுதப்படைக்கு மாற்றம்: கரூர் நகரில், சட்ட விரோத மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்நிலையில், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுக்கள் கதிர்வேல், மோகன்ராஜ், போலீசார் அருள், ஸ்ரீதர் ஆகியோரை, எஸ்.பி., சுந்தர வடிவேல், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். கரூரில் சட்ட விரோத மது விற்பனை குறித்து, சரிவர தகவல் தெரிவிக்காததால், அந்த நான்கு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X