குளித்தலை: குளித்தலையில், கள்ளத்தனமாக மது விற்ற, 4 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கல்லடையை சேர்ந்த முத்துச்சாமி, 62, கள்ளை பஞ்., சுக்காம்பட்டி வெள்ளைச்சாமி, 40, ஆகிய இருவரும், அவர்களது வீட்டு பகுதிகளில் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசாருக்கு கிடைத்த தகவல் படி, அங்கு சோதனையிட்டு, மதுபானங்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இதேபோல், உள்வீரராக்கியத்தை சேர்ந்தவர் முருகன், 52, கட்டளை ராமன், 49, ஆகியோர் மது விற்றனர். அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும, மாயனூர் போலீசார் கைது செய்தனர்.