சூலூர்:சுல்தான்பேட்டை போலீசார், குமாரபாளையம் பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, புளிய மரத்தோட்டம் பகுதியில் சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு சென்ற போலீசார், சேவல் சண்டை நடத்திய, ரங்கநாதன்,69, மயில்சாமி,56, சேகர், 33, அருண்குமார்,,29, சுரேஷ்குமார்,33, நடராஜ்,60 ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள், ரூ.3,300 பணத்தை பறிமுதல் செய்தனர்.