கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி எஸ்.எஸ்.ஐ., சுரேஷ்குமார், சோமனூர் அடுத்த தீப்பெட்டி மில் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அங்கு, பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த சின்னசாமி, 37, கோபி, 50, இருதயராஜ்,52, பாபு,42 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ650 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.