கோவை;'ரேஷன் கடைகளில், வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் இன்னும் வழங்கவில்லை' என, குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவையில், 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்ததால், வழக்கமாக மாதம்தோறும் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆனால், பண்டிகை முடிந்த மறுநாள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. குடும்ப அட்டைதாரர்கள் கடைக்குச் சென்று கேட்டபோது, 'பொருட்கள் ஸ்டாக் இல்லை' என, ஊழியர்கள் கூறியுள்ளனர். குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.