ஆன்லைனில் உறவினர்களிடம் பேசும் கைதிகள்! மத்திய அரசின் 'இ-பிரிசன்ஸ் சாப்ட்வேர்' பயன்பாடு அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
00:38

கோவை:கொரோனா பரவலால், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறையில் உள்ள கைதிகள், உறவினர்களிடம் பேச, மத்திய அரசின் 'இ-பிரிசன்ஸ்' சாப்ட்வேர் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என, 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி வழங்குகிறது. தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழக்கிழமைகளிலும், விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் உறவினர்கள் சந்தித்து பேசலாம். கடந்த, 2020ல் கொரோனா பரவல் காரணமாக சிறை கைதிகளை உறவினர்கள் நேரடியாக சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, வாட்ஸ்ஆப் வீடியோ கால் அழைப்பு மூலம் கைதிகள் உறவினர்களுடன் பேச சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இச்சூழலில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சிறைகளில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் இ-பிரிசன்ஸ் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் முன்பதிவு செய்து ஆன்லைன் வழியாக உறவினர்கள், கைதிகளுடன் பேச வழிவகை செய்யப்படுகிறது. சராசரியாக தினமும், 30 கைதிகள் வரை இம்முறை மூலம் உறவினர்களுடன் பேசி வருவதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.'வாரம் ஒருமுறை பேச வாய்ப்பு'கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் கூறியதாவது:கைதிகளை சந்திக்க விண்ணப்பிக்கும் உறவினர்களிடம் மொபைல்போன் எண், இ-மெயில் முகவரி, ஆதார் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். கைதிகளின் உறவினர்கள் கம்ப்யூட்டர், மொபைல்போன்களில் கூகுள் க்ரோம் வழியாக இ-பிரிசன்ஸ் என்று டைப் செய்து நுழைய வேண்டும். அதில், 'emulakat' என்ற பதிவை தொட்டால் படிவம் வரும். அவர்களின் பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, சந்திக்க உள்ள கைதியின் பெயர், உறவு முறை, சந்திக்க உள்ள தேதி போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும். மொபைல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., பதிவு செய்ய வேண்டும். சிறைத்துறை நிர்வாகம் ஒப்புதல் அளித்ததும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் மெயில் முகவரிக்கு பிரத்யேக 'லிங்க்' அனுப்பப்படும். அதில் கைதியை சந்திக்கும் நேரம், தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த லிங்க்கை பயன்படுத்தி, உள்ளே சென்று குறிப்பிட்ட தேதி, நேரத்தில் 'வீடியோ' மூலம் கைதிகளை பார்த்து பேசலாம். ஒரு கைதிக்கு அதிகபட்சமாக, 30 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. ஒரு கைதி வாரத்துக்கு ஒரு முறை இம்முறையில் உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் இ-பிரிசன்ஸ் சாப்ட்வேர் மூலம் மத்திய சிறை, கிளை சிறைகளில் கைதிகள் பேசுவது அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X