கோவை;'தமிழக அரசு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி மேம்பாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.கல்வி மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் லெனின் பாரதி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பிய கடிதத்தில், 'கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், மாநில அரசின் உயர்கல்வித்துறை காலம் தாழ்த்தாமல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைனில் நடத்துவதே சிறந்தது. முதல் பருவத்தேர்வே நடத்தாமல் இருப்பது கல்வி ஆண்டு குறித்த சிக்கலை உருவாக்கும்' என கூறியுள்ளார்.