சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட, சங்கனுார் பஸ் ஸ்டாப் அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரங்கசாமி, சங்கனுார்.
கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 65வது வார்டுக்கு உட்பட்ட, திருச்சி ரோடு, ஜி.வி.ரெசிடெண்ஸி செல்லும் ரோட்டின் அருகில் உள்ள, தரைப்பாலத்தின் கீழ் செல்லும் கால்வாய் முழுவதும் குப்பை கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்கால்வாயை துார் வாரவேண்டும்.-சரவணன், சவுரிபாளையம்.
பகலிலும் எரிகிறது விளக்குகவுண்டம்பாளையம், ராமகுட்டி லே-அவுட்டில் உள்ள, தெருவிளக்கு பகலிலும் எரிந்து, மின் விரயம் ஏற்படுகிறது. பகலில் அணைத்து மின்சாரத்தை சேமிக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சதீஷ்குமார், ராமு குட்டி லே-அவுட்.
குப்பை அள்ளுவதில்லைகுருடம்பாளையம் ஊராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட, தொப்பம்பட்டி பிரிவு பகுதிக்கு துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை. இதனால், தசரதன் பள்ளி சுற்றுச்சுவர் அருகே குவியும் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ஜெயசந்திரன், ஸ்ரீ ஹரி கார்டன்.
விளக்கு எரிவதில்லைதுடியலுார் அருகே வெள்ளக்கிணர், சவுடாம்பிகா நகரில் உள்ள மின் கம்பத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.- ராஜா, வெள்ளக்கிணர்.
போக்குவரத்து இடையூறுசுந்தராபுரம் - இடையர்பாளையம் ரோட்டில், தபால் நிலையம் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குறுகலான இச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. போலீசாரை நிறுத்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.- ரங்கநாதன், மாச்சம்பாளையம்.
போக்குவரத்துக்கு இடையூறுவடவள்ளி திருவள்ளுவர் வீதியில், சாலையின் பாதியளவுக்கு குவிக்கப்பட்டுள்ள, மரக்கிளைகள் மற்றும் குப்பையால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.- பிரபாகரன், வடவள்ளி.
வாக்கிங் செல்ல அச்சம்அவிநாசி ரோடு, விமான நிலையம் அருகில் உள்ள, அழகு நகர், சவுபாக்கியா நகர், லட்சுமி பாய் நகர் பத்மநாப நகர் பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவதால், இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்; அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் 'வாக்கிங்' செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.- பார்த்திபன், பத்மநாப நகர்.
குழியை மூட நேரமில்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, எம்.ஜி.ஆர்., நகர் மூன்றாவது வீதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி, பராமரிப்பு பணி முடிந்து, மூன்று மாதங்களாகியும் இன்னும் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.- ரகு, எம்.ஜி.ஆர்., நகர்.
டவுன் பஸ்சை முறையாக இயக்கணும்சூலுார் தாலுகா, காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, குமாரபாளையத்துக்கு, தினமும் நான்கு முறை இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் (வழித்தடம் எண்: 30 எம்), தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது; மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பஸ்சை முன்புபோல், தினமும் நான்கு முறை இயக்க வேண்டும்.- கருப்புசாமி, குமாரபாளையம்.