கோவை:புருனே நாட்டில் இருந்து கோவைக்கு வரும், 21ல் சிறப்பு விமானம் வருகிறது. இதற்கான முன்பதிவு, புருனேயில் உள்ள இந்திய துாதரகத்தில் நேற்று துவங்கியது.புருனே நாட்டில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கோவைக்கும் புருனேவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளில், 16 முறை இயக்கப்பட்டுள்ளது. 17வது முறையாக வரும், 21ல் கோவைக்கு ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமானம் வருகிறது.இதற்கான முன்பதிவு புருனே நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தில் நேற்று துவங்கியது. கடந்த, 7ல் புருனேயில் இருந்து ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமானம் கோவை வந்தது. தற்போது, இரண்டாவது முறையாக இம்மாதத்தில் வருகிறது. புருனே செல்வோர், இவ்விமானத்திலேயே செல்ல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன.