3 ஆண்டுகளாக செயல்படாத ஆழ்குழாய் ஆர்.ஓ. குடிநீர் பிளான்ட் | மதுரை செய்திகள் | Dinamalar
3 ஆண்டுகளாக செயல்படாத ஆழ்குழாய் ஆர்.ஓ. குடிநீர் பிளான்ட்
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுரை : மதுரை ஆரப்பாளையம் கோமஸ்பாளையத்தில் 2016--2017ல் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் ஆர்.ஓ., குடிநீர் பிளான்ட் 3 ஆண்டுகளாக நீரின்றி வீணாக கிடக்கிறது.

இப்பகுதி சமூக ஆர்வலர் முத்துச்செல்வம் கூறியதாவது: இந்த ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டு வெறும் இரண்டு மாதங்களே பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பெரிதும் தீர்த்து வந்த இப்பிளான்ட் மூன்று ஆண்டுகளாக செயல்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கவும், குடிநீரை தேடி அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது போல் ஆழ்குழாய்கள் இல்லாமல் மாநகராட்சி தெருக்களில் குடிநீர் நிரப்ப பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளும் வீணாக கிடக்கின்றன.நீரில்லா இந்த தொட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரோட்டின் ஓரம், நடுவில் உள்ளன. வீணாக கிடக்கும் இத்தொட்டிகளை அகற்றி தேவையான இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்தலாம். பல தொட்டிகள் சேதமடைந்து, உடைந்தும் உள்ளன. இதற்காக ரூ.சில ஆயிரங்கள் செலவழித்தது தான் பெரிய வேதனை என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X