அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் அனலாய் சீறிப்பாய்ந்த காளைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
01:23

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஜல்லிக்கட்டில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.



அனலாய் சீறிப்பாய்ந்த காளைகள் பிடிகொடுக்காமல் விளையாட்டு காட்டி பார்வையாளர்களை கவர்ந்தன. அவற்றை உயிரை பணயம் வைத்து அடக்கி காளையர் பரிசுகளை தட்டி சென்றனர்.பொங்கலையொட்டி ஜன., 16ல் நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு கொரோனா முழு ஊரடங்கால் நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அதிக காளைகளை அவிழ்த்து விட ஏதுவாக காலை 6:40 மணிக்கே துவங்கியது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டை துவக்கினர். முதலில் அலங்காநல்லுார் முனியாண்டிசுவாமி கோயில் காளை, அரியமலை கோயில் காளை, வலசை கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டன.

பின் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.விளையாட்டு காட்டிய வெள்ளைஅவிழ்த்து விடப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் முதல்வர் ஸ்டாலின் சார்பில் தங்ககாசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு காளையும் வாடிவாசலிலிருந்து வீரர்களிடம் சிக்காமல் அனலாய் சீறிப்பாய்ந்தன. சில காளைகள் பிடிகொடுக்காமல் அடக்க முயன்றவர்களை துாக்கி வீசி மைதானத்தை சுற்றிவந்து விளையாட்டு காட்டின. கரூர் வெள்ளை காளை உள்ளிட்ட சில காளைகள் வீரர்களை விரட்டி விரட்டி சிதறடித்தன. அதையும் மீறி மாடுபிடி வீரர்கள் அவற்றை அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு எம்.எல்.ஏ., உதயநிதி சார்பில் தங்ககாசு வழங்கப்பட்டது.அவிழ்த்து விடப்பட்ட 1020 காளைகள்மொத்தம் 1060 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 5:30 மணி வரை நடந்த எட்டு சுற்றுகளிகளில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் முப்பது மாடு பிடி வீரர்கள் ஒவ்வொரு வண்ண டீசர்ட் அணிந்து களமிறக்க வைக்கப்பட்டனர். இதில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் 21 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றார்.

19 காளைகளை அடக்கிய அலங்காநல்லுார் ராம்குமாருக்கு 2வது பரிசாக பைக், 13 காளைகளை அடக்கிய சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணனுக்கு 3வது பரிசாக பைக் வழங்கப்பட்டது.காளையரிடம் பிடி கொடுக்காமல் சிறப்பாக போக்கு காட்டிய புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வம் காளை முதல் பரிசான காரை வென்றது. திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம் காளை 2வது பரிசாக பைக், குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதி காளை 3வது பரிசாக பைக் வென்றன.முதல்வர் சார்பில் கார் பரிசுசிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு எம்.எல்.ஏ., உதயநிதி சார்பில் கார்கள் பரிசளிக்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கினர்.மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், டி.ஐ.ஜி.,பொன்னி, எஸ்.பி., பாஸ்கரன், மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ., சுகி பிரேமலா, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஷ்வரன், கயிலைசெல்வம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் மற்றும் விழா கமிட்டியினர் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக வெளியூர்களை சேர்ந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டை காண அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டதால் உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

வெளியூர்களிலிருந்து சென்றவர்கள் ஆங்காங்கு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.வாரிய உறுப்பினர் பாராட்டுதேசிய பிராணிகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்து விடுவதை ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: ஐந்தாண்டுகளாக தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆய்வு செய்ய வருகிறேன். இது பாரம்பரிய விளையாட்டு. போட்டி அல்ல. அதை உணர்ந்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். காளைகளுக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் நடத்துவது பாராட்டுக்குரியது என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X